வல்லிக்கண்ணன் கடிதங்கள் 3

வல்லிக்கண்ணன்                                                             சென்னை 29-5-2001

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். சென்னையில் நீங்கள் எத்தனை எழுத்தாளர்கள் – பத்திரிகைக்காரர்கள் – புத்தக வெளியீட்டாளர்களைக் கண்டு பேசினீர்களோ, தெரியாது. அது நல்ல அனுபவமாகத் தான் இருந்திருக்கும். பொதுவாக, மனிதர்கள் பல ரகம். ஒவ்வொருவரும் விதம் விதமான நோக்குகளும் போக்குகளும் உடையவர்கள்.

எழுத்தாளர்களும் மனிதர்கள் தானே! ஆனால், அநேகர் மனிதத் தன்மையோடு பழகி வாழ்வதில்லை. அதுதான் பெரிய குறைபாடு. எழுத்தாளர்கள் இடையே ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பிரச்சினை முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது – தூக்கிப் பிடிக்கப்படுகிறது. பல மாதங்களுக்கு முன்பு, சாகித்ய அகாடமி – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – சா.கந்தசாமியின் வேலைகள் பற்றி ‘சண்டை’கள். பிறகு, தி.க.சி.க்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்தது முறையல்ல என்ற விவகாரம். இப்போது புதுமைப்பித்தன் யாருக்கு சொந்தம்? பொதுச் சொத்தா? குடும்பச் சொத்தா? எனும் சூடான விவகாரம்! அன்பு – வ.க. 

6 comments:

 1. அய்யா,
  வணக்கம். கடிதத்தொடர்ச்சிக்கு மகிழ்ச்சி.
  ஆட்கள் இருந்தாலும் இறந்தாலும் காட்சிகள் அப்படியேதான் தொடரும் போல!
  2011 இல் சாகித்ய அகாதமி பெற்ற சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் குறித்து ‘ஆயிரம் பக்க அபத்தம்‘ என விமர்சித்த எஸ் இராமகிருஷ்ணன் தரப்பினருக்கும் ஆதரித்த ஜெயமோகன் தரப்பினருக்கும் நிகழ்ந்த விவாதங்களை நினைவு படுத்துகிறது தங்களின் பதிவு,
  தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 2. அய்யா
  கடிதங்கள் தொடரட்டும்

  ஜோ.வி தெரிவிக்கும் தகவல்கள் கூடுதல் மகிழ்வு...
  நன்றி
  http://www.malartharu.org/2012/12/blog-post_5854.html

  ReplyDelete
 3. அய்யா மகிழ்ச்சி தொடரட்டும், தொடரட்டும். இலக்கியம் என்பதே, தனிப்ப்ட எழுதினாலும், அது பொதுவானதுதான் என்பதைச் சொல்லாமல் சொலலி இன்றும் பொருந்தும் எழுத்துகள் இவை!
  “குரங்குக்கு வால்நீண்டால்தான் கேட்கவேண்டும், மயிலுக்குத் தோகை நீண்டால் மகிழ்ச்சிதானே?” - பொன்னியின் செல்வன் முன்னுரையில் ராஜாஜி. தொடரட்டும், தொடர்கிறோம்.

  ReplyDelete
 4. அய்யா தாங்கள் தொடர்ந்து வலைப்பக்கம் வருவது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நன்றி தொடருங்கள். நிற்க. வ.க.கடிதங்கள் இரண்டுதானே வந்துள்ளன, 3என்பதன் பொருள் புரியவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. ஆர்வ மிகுதியால் கண்ணில் பட்ட கடிதத்தை முதலில் பதிவிட்டு விட்டேன். பின்னர் கவனித்தபோது கால வரிசைப்படி இல்லாதது தெரியவந்தது. கால வரிசை இருந்தால்தான் பொருண்மைத் தொடர்ச்சி கிடைக்கும். இரண்டாவதும் மூன்றாவதும் அடுத்தடுத்த நாளில் வல்லிக்கண்ணன் ஐயா அனுப்பியவை. எனவே, முதலாவது கடிதம் விரைவில் பதிவிடப்படும். அதன் பின் வரிசை சரியாகிவிடும். ஐயத்திற்கு நன்றி.

   Delete
 5. வணக்கம் ஐயா
  கடிதத் தொடர்ச்சி மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இவ்வளவு பணிகளுக்கு இடையிலும் பதிவிடுவது சாதாரண விசயமில்லை. எழுத்தாளர்களுக்கு இடையேயான கருத்துப் போர்கள் பற்றி அறிய செய்தமைக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்