வல்லிக்கண்ணன் சென்னை 19-11-2001
அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம். நான் உங்களுக்குக் கடிதம் எழுதி அநேக வாரங்கள் ஆகிவிட்டன. அக்டோபர் முதல், எனது இயல்புகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்ட செயல்முறைகளில் உழல வேண்டிய ஒரு கட்டாயம்.