குணவீர பண்டிதர்: சொன்னதும் செய்ததும்


       
Dr .N. ARULMURUGAN

      அச்சில் வருவதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. அவர்களைப் பொறுத்தவரை காதுக்கு வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை; கேள்விக்கு அப்பாற்பட்டவை. அவர்கள் புழக்கத்திலுள்ள இலக்கிய இலக்கண வரலாறுகளையும் இப்படித்தான் அப்பட்டமாக நம்புகிறார்கள். அன்றாடச் செய்திகளில் உண்மைக்கு எவ்வளவு இடம் உள்ளதோ அதற்குச் சற்றுக் கூடுதலான இடமே பெரும்பாலான வரலாறுகளிலும் உள்ளது. இவ்வாறு வரலாறுகளில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதற்கு அவற்றுக்கான ஆதாரங்களின் குறைபாடும் ஒரு காரணம்.

2014 புத்தாண்டும் 24 மணி நேரமும்
இப்போதெல்லாம் கொண்டாட்டங்கள் என்றால் அத்துமீறுபவையாகவும் அருவருக்கத்தக்கவையாகவும் ஆகிப்போகிற நிகழ்வைப் பார்க்கிறோம். அதுவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி ஆகிவிடுகிறது. மோட்டார் வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாகச் செல்வது, விநோத ஒலி எழுப்புவது, வயது வித்தியாசமின்றி விடுதி நடனங்களில் பங்கேற்பது, பெண்களைக் கேலி செய்வது என்னும்படியாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பரிமாணம் கொள்ளும்போது அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இவற்றுக்கு மாற்றாக சாத்வீகமான கொண்டாட்டங்கள் சாத்தியப்பட வேண்டும்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்