இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா கிடக்கும் டயரை எடுத்து ஓட்டிப்பார்த்து ஆகா நாம் கூட சைக்கிள் விடுகிறோமே என்று மகிழ்ந்து போகிற பிஞ்சுப் படைப்பாளர்கள்தாம் அதிகம். நிஜக் காரைப் பார்த்து பொம்மைக் காரில் வலம்வரத் துறுதுறுக்கும் ஆர்வலர்களே மிகுதி. இங்கு படைப்புக்கான உங்கள் விதிகள் செல்லாது. புதுமைப்பித்தன் சொன்னதுபோல உங்கள் அளவுகோல்களை இங்கு வைத்து அளக்க முடியாது. எங்கள் படைப்புகளில் இருந்து நீங்களே விதிகளைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
முத்தொள்ளாயிரத்தில் அஃறிணை உயிர்கள்
முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் காலமாகப் படித்துப் பூரித்துப்போக முடியுமா? முடியும் என்பதற்கான உதாரணங்களுள் ஒன்றுதான் முத்தொள்ளாயிரம். இலக்கியத்தில் புனைவு இருக்கலாம். ஆனால், புனைவே இலக்கியமாக இருப்பதும் புனைவிலக்கியமாக இருப்பதும் முத்தொள்ளாயிரத்தின் தனிச் சிறப்பு. முத்தொள்ளாயிரம் என்பது ஒரு தொகுக்கப்பட்ட நூல் என்பதும் அதில் கடவுள் வாழ்த்தோடு 109 பாடல்கள் கிடைத்துள்ளன என்பதுமான அதன் பெயர்க்காரணம் முதற்கொண்டு கட்டமைப்பு மற்றும் எண்ணிக்கை பற்றிய புனைவுகள் வரை இதில் அடக்கம்.
2014 புத்தாண்டும் 24 மணி நேரமும்
நீலகேசி உரைநூல்
நீலகேசி
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும்
பௌத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு
மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப்போகின்றன. நீலகேசி
நூலின் சிறப்பு, அதன் பதிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்தான செய்திகள் மிகக் குறைவாகவே
உள்ளன. கிடைத்திருக்கும் தருக்க நூல்களில் சிறந்த ஒன்றான நீலகேசி சமயதத்துவ ஆய்விலும்
சொற்போரிலும் இறங்கிக் களம் கண்டது பெரிதும் அறியப்படாமலேயே போயிருக்கிறது.
’தேவன்’ யார்?
நீலகேசி அவையடக்கம் ஐந்தாம் செய்யுளில் தேவன் என்னும் சொல் பயின்று
வருகிறது. இது திருவள்ளுவரைக் குறிப்பதாகுமா? இதுபற்றிய பெருமழைப் புலவரின் ஆராய்ச்சி
நுணுக்கம் எந்த அளவில் உள்ளது? என்பன பற்றி இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகிறது.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நீலகேசி சக்கர்வர்த்தி நயினார் பதிப்பாக1936இல் வெளிவந்தது. சமய திவாகர வாமன முனிவர் இதன் உரையாசிரியர் ஆவார். இதன் நூலாசிரியர் யார் எனத் தெரியவில்லை. இதை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரை உரையாசிரியராகக் கொண்டு நீலகேசி விளக்கவுரை என்னும் பெயரில் 1964இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
‘பழைய உரையாசிரியரால் உரையெழுதாமல் விடப்பட்ட செய்யுள் உட்பட எல்லாச் செய்யுட்களுக்குமே சொற்பொருள் உரை வகுத்தும் பழைய உரையாசிரியர் உரையிற்கண்ட நுணுக்கங்களைச் சிறிதும் எஞ்சாது தழுவிய விளக்கவுரை வகுத்தும்’ கழகம் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
சப்பாத்திக் கள்ளிகளின் முட்கள்
-
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan 'THAAI VAZI SAMUTHAAYAM' புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத பாறை ஓவிய...
-
இது எனக்கு ஓர் அரிய நிகழ்வு. புதுக்கோட்டை மாவட்டத்தை விட்டுப் போவதற்கு முன்னால் நான் கலந்து கொண்ட கடைசி விழாவின் மேடை கவிஞர் தங்க...
-
முழுக்க முழுக்க அதீதக் கற்பனையும் அசாத்தியப் புனைவுமாக ஓர் இலக்கியம் இருக்க முடியுமா? அதை எல்லாரும் கொண்டாட முடியுமா? காலம் கால...


