வல்லிக்கண்ணன் சென்னை 27-2-2002
அன்பு மிக்க ......, வணக்கம்.
உங்கள் 16-2-2002 கடிதம் 20ஆம் தேதி வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சலட்டை வரவேயில்லை.
உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சோதனைகள், மாறுதல், உங்கள் முயற்சிகள், நம்பிக்கை பற்றி அறிந்தேன். வெற்றி கிடைக்கட்டும். வளர்ச்சி பெற்று முன்னேறுவதற்கு காலம் துணைபுரியட்டும். வாழ்த்துகள்.