திருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்

  Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan  'THAAI  VAZI  SAMUTHAAYAM'
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan
'THAAI  VAZI  SAMUTHAAYAM'
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத பாறை ஓவியங்கள் திருமயத்தில் காணப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள ஆய்வு திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துவரும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டக் கண்காட்சியில் இடம்பெற்றது. திருமயம் பாறை ஓவியங்கள் கண்காட்சியைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு. செ. மனோகரன் திறந்து வைத்தார். முதன்மைக்கல்வி அலுவலர் நா.அருள்முருகன் திருமயம் பாறை ஓவியங்கள் குறித்துத் தெரிவித்திருப்பதாவது.
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan
திருமயத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையைக் காட்ட உதவும் முதன்மையான ஆதாரமாகும். இந்தப் பாறை ஓவியங்கள் இப்போதுதான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. சித்தன்ன வாசல்  ஓவியம் கி.பி. 7 – 9 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலப் பகுதியைச் சார்ந்தது. திருமயத்தில் தற்போது தெரியவந்திருக்கும் பாறை ஓவியங்கள் கி.மு. 5000க்கும் முற்பட்டவையாகும். இவை புதுக்கோட்டை மாவட்டத்து ஓவியங்களிலேயே மிகவும் பழமையானவை ஆகும்.



திருமயத்தில் மூன்று இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. திருமயம் குன்றின் தென்பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கும்  பெருமாள் கோவிலுக்கும் இடையில் உள்ள குகைக்கு மேல்பகுதியில் பாறை ஓவியங்கள் உள்ளன. சிவன் கோவில் பிரகாரத்திற்குக் கீழ்ப்புறத்தில் இருந்து வடகிழக்காக நின்று வலது கைப் பக்கமாக மேலே பார்த்தால் ஓவியங்கள் இருப்பது போல் தெரிகிறது. இவை கைகளைப் போன்றும் காது நீண்ட முயல்களைப் போன்றும் தோன்றுகின்றன. அல்லது வேறு மனித, விலங்கு உருவங்களாகக் கூட இருக்கலாம். கோபுரப்பகுதியில் ஏறிப் பார்த்தால் இன்னும் ஓவியங்கள் இருக்கக் கூடும்.
கோட்டையின் நுழைவாயிலுக்குள் வந்தவுடன் வலது புறம் பார்த்தால் தலைப்பாகை அல்லது தொப்பி வடிவப் பாறை தெரியும். இந்தப் பாறையின் மேற்குப் பக்கம் கீழ்ப்பகுதியில் ஒருசில ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களின் செய்தியை அறியமுடியாதபடி நிறம் மங்கிப் போயுள்ளன.
திருமயம் கோட்டை நுழைவு வாயிலின் உள்ளே இடதுபக்கம் தெரியும் மனிதத்தலை வடிவப் பாறையிலும் ஓவியம் காணப்படுகிறது. தெற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
 தெற்குப் பக்கம் உள்ள ஓர் ஓவியத்தில் ஆணும் பெண்ணும் கைகோத்தபடி படுத்திருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இது மெய்யுறு புணர்ச்சியைச் சுட்டும் ஓவியம் ஆகும்.
மற்றொரு ஓவியத்தில் கீழே இருக்கும் உருவங்கள் இசைக் கருவிகள் வாசிக்க மற்றவர்கள் ஆடுகிறார்கள். ஒரு ஜோடி ஆணும் பெண்ணும் கைகோத்து ஆட, கீழே இருக்கும் இருவர் இசைக் கருவியை இசைத்துக்கொண்டே  ஆடுகின்றனர். தலையில் அழகிய குஞ்சம் கட்டிய ஒருவரும் இன்னொருவரும் அமர்ந்துகொண்டு மத்தளம் போன்ற ஏதோ ஓர் இசைக் கருவி வாசிக்கின்றனர். இந்த ஆட்டம் தொல்காப்பியத்தில் சொல்லப்படும் உண்டாட்டு என்னும் வகையைச் சேர்ந்தது எனலாம். ஆட்டத்தைக் காண்பதுபோல் தோன்றும் ஓவியம் மற்ற ஓவியங்களைக் காட்டிலும் பெரிய உருவமாக உள்ளது. இது இங்கு வாழ்ந்த கூட்டத்தின் தலைவியைக் குறிப்பதாக இருக்கலாம்.
கிழக்குப்பக்கத்தில் உள்ள ஓவியத்தில் சண்டையிடுதல் அல்லது வேட்டையாடுதல் போல உள்ளது. சூரிய ஒளி படும் திசையில் உள்ளதால் மங்கலாக உள்ளது. விலங்கின் மீது மனிதன் அமர்ந்த நிலையிலான மற்றோர் ஓவியத்தில் விலங்கு நீண்ட உருவமாக வரையப்பட்டுள்ளது. இது இடம் விட்டு இடம் பெயர்வதைச் சுட்டும் ஓவியமாகும்.
பாறையின் வடக்குப் பக்கத்தில் நிறைய மனித உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் பின்னால் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து செல்வது போலவும், நிற்பது போலவும் ஆயுதம் தாங்கிய உருவங்கள் அமைந்திருக்கின்றன.
திருமயத்தில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களில் செந்நிறம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அடர்த்தியான வண்ணப் பூச்சும் கோட்டு உருவங்களும் சில ஓவியங்களில் காணப்படுகிறது. தாய்வழிச் சமுதாயம், வேட்டையாடுதல், கல்லாயுதம் பயன்பாடு, சக்கரத்திற்கு முந்தைய விலங்கின் மீது ஏறிச் செல்லுதல், ஆடல் கலை ஆகியவற்றில் இருந்து திருமயம் பாறை ஓவியங்கள் கி.மு. 5000-கி.மு.10000 காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம். இது குறித்து மேலும் ஆய்வுசெய்து வருகிறேன்.
Thirumayam Rock Paintings-
Dr.N.Arul Murugan
'KAI VADIVAM'
Thirumayam Rock Paintings-
Dr.N.Arul Murugan
'KAI VADIVAM'
திருமயத்தின் பாறையில் ஓவியங்கள் இருப்பது தெரியாமல் அவற்றின் மீது கோட்டையைப் பார்க்க வரும் பலரும் தம் பெயரையும் பிறவற்றையும் கிறுக்கி வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்த ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்பழங்கால வரலாற்றை அறிய உதவும் ஒரே ஆதாரம் திருமயம் பாறை ஓவியங்கள்தான். தொல்லியல் துறை மரபுச்சின்னங்களான இவை மேலும் அழிந்துவிடாமல் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan 'MEYYURU PUNARCHI'

Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan - 'UNDAATTU'



-------


Dr. N. Arulmurugan, CEO, Pudukkottai, Discovered Thirumayam Rock Painting


நன்றி: 

தினத்தந்தி 23.11.2013




http://www.dailythanthi.com/2013-11-23-BC-5-thousand-years-SoughtRock-Paintings-
http://dinamani.com/tamilnadu/2013/11/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5/article1908282.ece
 தீக்கதிர் 23-11-2013 கடைசிப்பக்கம் - Inventionhttp://epaper.theekkathir.org/
 http://www.ndtv.com/article/south/ancient-rock-murals-found-in-tamil-nadu-s-pudukottai-district-449669

THE HINDU, INDIAN EXPRESS-City Express தி ஹிந்து தமிழ், தினகரன், தினமலர் மற்றும் ஊடகங்கள்

29 comments:

  1. அய்யா
    அர்த்தமுள்ள தேடல்கள் இலக்கை அடையாது போனதேயில்லை....
    புதுகையின் மண்ணின் மைந்தர்கள் சார்பாக மிகுந்த நன்றிகள்
    வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆய்வு செய்து பதிவிடும் ஆய்வாளர்கள் இனி திருமயத்தை மையம் கொண்டு செயல்படுவார்கள். பூலான்குறிச்சி கல்வெட்டையும் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறன்...

    புதுகையின் வராற்றை புத்தாக்கம் செய்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. செய்தித் தாள்களின் வழி தங்களின் ஒப்பற்ற கண்டுபிடிப்பை அறிந்தேன் ஐயா.தங்களின் பணி தொடரட்டும் ஐயா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களின் ஆதங்கம் நல்லபடியாக நிறைவேறனும் ஐயா... தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  4. சில இணைப்புகள்...
    1. http://bit.ly/19TAfD6
    2. https://commons.wikimedia.org/wiki/File:Thirumayam.jpg
    3. https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கொடுத்துள்ள 2ஆம் குறிப்பு சிறப்பாகப் பதியப்பட்டுள்ளது. 1,மற்றும் 3ஆம் குறிப்புகள் கிடைக்கவிலலையே கஸ்தூரி, இதில் ஏதாவது தொழில் நுட்ப ரகசியம் உள்ளதா? தெரியலயே?

      Delete
    2. அப்படி ஒன்றும் இல்லை ... விக்கி காமன்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இணைப்பு அவை... புகைப்படத்திற்கு சொந்தக்காராரை காட்டும் அவ்வளவே...

      Delete
  5. புதுகை வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம்.மாணவர்கள் மனதில் மண்ணையும் ,மொழியையும் நேசிக்கும் பண்பை வளர்த்தால் தொண்மை பாதுகாக்கப்படும்.நன்றி

    ReplyDelete
  6. மிக அருமையானதொரு கண்டுபிடிப்பு ஐயா! உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
    தொன்மையைப் பாதுகாப்பதை மக்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  7. 'தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
    சூழ்கலை வாணர்களும் - இவள்
    என்று பிறந்தனள் என்றுணராத
    இயல்பின ளாம் எங்கள் தாய்“ என்று பாரதி பாடும் பாரத வரலாற்றில் நமது புதுக்கோட்டை-திருமயம் பாறை ஓவியங்களும் ஒரு நல்ல சான்றாக அமையும் எனும் மகிழ்ச்சி தங்களால் கிடைத்தது கண்டு பெருமைப் படுகிறோம் அய்யா... விரைவில் இருமொழி நூலாக எழுதி வெளியிட்டுவிடுங்கள்... இது முக்கியம் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. இருமொழி நூலாக வந்திருந்தால் உடனடியாக உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கும். எனினும் ஒருமொழி நூலாகவேனும் இப்போது வருவது குறித்து மகிழ்ச்சி அய்யா. விரைவில் ஆங்கில மொழியாக்கம் வர முயற்சி செய்ய வேண்டுகிறேன். வணக்கம்.

      Delete
  8. கண் பார்வை இல்லாரையும் காணும் வகை செய்வது சிற்பக் கலை. காட்சியின் மூலமாகக் கருத்தை உணர்த்துவது ஓவியக் கலை. வரி வடிவ எழுத்துகள் தோன்றும் முன்பாகச் சித்திர வகை எழுத்துகள் இருந்தன என்பார்கள். அந்த வகையில் பார்க்கும் போது தங்களின் கண்டுபிடிப்பு உண்டாட்டு, தாய் வழிச் சமுதாயம், மெய்யுறு புணர்ச்சி உள்ளிட்ட கருத்துகளை வெளிக்கொணர்கின்றன. எனவே, தங்களின் வியூகம் உண்மை போலவே தொடருகிறது ஐயா. பாண்டிய நாட்டில் உள்ள பல்வேறு மலைகள், மலைக் குன்றுகளில் தமிழ் மொழியின் பழைய வடிவமான தமிழி எழுத்துக் கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. அந்தப் பழமையுடன், பழம்பெருமை வாய்ந்த திருமெய்யம் மலைக் குன்றின் ஓவியங்கள் ஒப்பிடப்படும்போது இந்த ஓவியங்கள் மிகப் பழமையே என்பதனைச் சுட்டுகின்றன. தமிழியல் ஆய்வையும் தாண்டிய தங்களின் வரலாற்றியல் ஆய்வு வான் போல் பிரபஞ்சம் போல் விரிவடைய வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா
    புதுக்கோட்டை வரலாற்றை உலகறியச் செய்த தங்கள் கண்டுபிடிப்பு, இந்திய தொல்லியல் துறைக்கும் அடையாளப்படுத்தியுள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி அய்யா. தங்கள் தேடல் மிக உயர்வானது தங்கள் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து இன்னும் மறைந்து கிடக்கும் பழம்பெரும் வரலாற்றுப் பொக்கிசங்கள் வெளிவர வேண்டும் என்பது எங்கள் ஆசை. தொல்பழங்காலத்து ஓவியத்தைத் தாங்கள் அடையாளம் கண்டு உலகிற்கு அடையாளப்படுத்தியமைக்கு நன்றிகள் அய்யா. ஆய்வுகள் தொடர்ந்து பழங்காலத்தை வரலாற்றைக் கண்டு புது வரலாறு படையுங்கள் படைக்க வாழ்த்துக்கள் அல்ல வணங்குகிறேன் அய்யா..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள், அருள்முருகன் அவர்களே! தொடர்ந்து ஆய்வு செய்யவும் நூலாக வெளியிட்டு ஆய்வை நிரந்தரப்படுத்தவும் உறுதி கொள்ளுங்கள்! - கவிஞர் இராய செல்லப்பா

    ReplyDelete
  11. ஆய்வு தொடருட்டும் அய்யா!

    ReplyDelete
  12. congratulations sir! you have done a great discovery by revealing the legend arts and fame of our district...
    Nagaraj, Rappusal

    ReplyDelete
  13. Wonderful Information About Pudhukai History

    ReplyDelete
  14. I am very happy about your information. It is new information. We do n't know the fact till now. thodarattum ungal aaivu. vazhga vazhamudan ena vazhththum. M.Manickam

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. புதுகை கல்வித்துறை மட்டுமல்லாது...
    புதுகையின் வரலாற்றையும் புத்தாக்கம் செய்துள்ளீா்கள்
    நன்றிகள்..
    வாழ்த்த வயதில்லை எனக்கு... வணங்கி மகிழ்கின்றேன்...

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா,

    இதுநாள்வரை.... இங்கே........
    ஒளிந்திருந்த வரலாற்றுப்பதிவுகளை.......
    கண்டும்...... காணாது......
    கடந்து சென்ற.......
    கோடானு.... கோடி......
    கண்களிடையே.......!
    நம் வரலாற்றுப் பதிவுகளை.....
    ஆய்வுக்கண் கொண்டு.....
    கண்டுவிட்ட..... தமிழறிஞரே..!
    வரலாற்றுப் பின்னணியாம்.....
    ''தாய்வழிச் சமுதாயத்திற்கு''
    தக்கதொரு சரியான....
    வரலாற்றுச் சான்றுகளைக் கண்டு!
    தமிழ் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு!
    ''தமிழும் - வரலாறும்''
    என்றென்றும் கைகோர்த்துநிற்கும்!
    அரிய பதிவுகளை....
    பதிவு செய்தமைகண்டு வியக்கின்றோம்!
    தங்களின் மேன்மைமிகு ஆய்வுப்பணிக்கு....
    ''வரலாற்றுக் குடும்பம்'' சார்பாக
    எண்ணம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
    "வரலாறு... உள்ளளவும்... நின்புகழ்...
    என்றென்றும்... நிலைக்கும்... அய்யா!!"
    மேலும் தங்கள் ஆய்வுப்பணி தொடர்ந்து....
    சிறக்க - நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ம் இதுபோன்ற பாறையில் ஓவியங்களின் சாயல்களை கழுகு மலை கல் குவாரியில் பார்த்துள்ளேன் அவை நொருக்கப்பட்டு ஜல்லிகலாக ஆகிவிட்டதை தங்களின் ஆய்வின் மூலம் 20 வருடங்களுக்கு பின் தற்போது தன் உணர்குறென்

    ReplyDelete
  20. ஐயா வணக்கம்!
    நான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள வீரணாம்பட்டியை சேர்ந்தவன்.நான் இப்பொழுது மலேசியாவில் வசிக்கிறேன்.
    நமது புதுக்கோட்டையின் வரலாற்றையும்,பிரசித்திபெற்ற கோவில்களையும்,மிகச்சிறந்த கல்வெட்டுகள் மற்றும் ஓவியங்களையும் உலகிற்கே அறிய வைத்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும்,வணக்கங்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. You are Great .. sir.. . Department Of Tourism will allocate more funds to retain the beauty of old paintings .. I hope so If it happens, All Credit goes to YOU ..

    ReplyDelete
  22. Great sir. Paintings similar to Keelvalai in Villuppuram. The latter form the framework for decipherment of Indus script explained in detail in the book 'Read Indussian -the archaic Tamil from 7000BCE'.

    ReplyDelete
  23. https://m.facebook.com/pages/Indus-Civilisation-is-ancient-Tamil-proved/280866538683183?id=280866538683183&viewtype=admin&m_sess&__user=100001700222469

    ReplyDelete
  24. YOU ARE GREAT SIR........THANKS FOR YOUR INFORMATION SIR.......

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்