திருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்

  Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan  'THAAI  VAZI  SAMUTHAAYAM'
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan
'THAAI  VAZI  SAMUTHAAYAM'
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத பாறை ஓவியங்கள் திருமயத்தில் காணப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள ஆய்வு திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துவரும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டக் கண்காட்சியில் இடம்பெற்றது. திருமயம் பாறை ஓவியங்கள் கண்காட்சியைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு. செ. மனோகரன் திறந்து வைத்தார். முதன்மைக்கல்வி அலுவலர் நா.அருள்முருகன் திருமயம் பாறை ஓவியங்கள் குறித்துத் தெரிவித்திருப்பதாவது.
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan
திருமயத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையைக் காட்ட உதவும் முதன்மையான ஆதாரமாகும். இந்தப் பாறை ஓவியங்கள் இப்போதுதான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. சித்தன்ன வாசல்  ஓவியம் கி.பி. 7 – 9 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலப் பகுதியைச் சார்ந்தது. திருமயத்தில் தற்போது தெரியவந்திருக்கும் பாறை ஓவியங்கள் கி.மு. 5000க்கும் முற்பட்டவையாகும். இவை புதுக்கோட்டை மாவட்டத்து ஓவியங்களிலேயே மிகவும் பழமையானவை ஆகும்.

நீலகேசி உரைநூல்

 மொழிபெயர்ப்பும் விடுபடல்களும்
நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப்போகின்றன. நீலகேசி நூலின் சிறப்பு, அதன் பதிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்தான செய்திகள் மிகக் குறைவாகவே உள்ளன. கிடைத்திருக்கும் தருக்க நூல்களில் சிறந்த ஒன்றான நீலகேசி சமயதத்துவ ஆய்விலும் சொற்போரிலும் இறங்கிக் களம் கண்டது பெரிதும் அறியப்படாமலேயே போயிருக்கிறது.

மரமண்டை



இந்த வழியாப் போம்போதெல்லாம்
எதையோ பறிகுடுத்தாப்ல இருக்கு.

ஆயிர ரூவா பிச்சக் காசுக்கு
இங்கிருந்த ரெண்டு புளியமரத்தையும்
வெட்டிட்டானுங்க போன வருசம்.

கடவுள் வணக்கம்





பாட்டனின் முதுகில் உப்புமூட்டை ஏறி
காதுகடித்துக் கிச்சுக் கிச்சு மூட்டி
கண்ணைப் பொத்தி விளையாடியதில்லை.

பாட்டியின் மடியில் பழங்காலத்து
ராஜாக் கதைகளை ரசித்தபடியே
தூங்கிப் போன அனுபவமில்லை.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்