எனது முனைவர் பட்டத்திற்கான நேமிநாத ஆய்வு குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் கேட்டவர்கள் கொஞ்சம் வியப்புடனும் மனசுக்குள் கேள்வியுடனும் என்னைப் பார்ப்பது உண்டு. ‘நேமிநாதமா? அப்படியொரு இலக்கண நூலா? நான் கேள்விப்பட்டதில்லையே…’ என்றவர்களும் ‘இலக்கிய வரலாறுகளில் சின்னூல் எனச் சொல்வார்களே அதுவா?’ என்று ஒரு நூற்பெயராக மட்டுமே தாம் கேள்விப்பட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.