மந்தணம்


நினைவூட்டு மிகவும் அவசரம் தனிக்கவனம்

வரைவுத் தணிக்கைத் தடை நிவர்த்திக்கான விரைவுச் செயல்முறைகள்
ஓ.மு.எண்: 311213/மு.ஆ.1/2014  நாள்: 01.01.2015
மார்கழி 17 திருவள்ளுவர் ஆண்டு 2045
*****

வருகையின் பதிவுகள்

     புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இசை மேதைகள், சமயச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேரறிவாளர்கள் பலருடைய பாதம்பட்ட இடமாகும். இப்பள்ளியின் பார்வையாளர் பதிவேடே இதற்கான சான்று.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 8

வல்லிக்கண்ணன் சென்னை 1-9-2001

      ...... வணக்கம். உங்கள் 24-8-2001 கடிதம் 27ல் வந்தது. மகிழ்ச்சி. 25 அன்று புக் போஸ்டில் ‘கவிக்கோ’ இரண்டாவது இதழ் அனுப்பினேன். நீங்கள் இங்கு வந்த போது, அதை நான் முழுமையாகப் படித்திருக்கவில்லை. ராபர்ட் ஃபிராஸ்ட் பற்றி ஆக்டேவியா பாஸ் எழுதியதை படிக்க வேண்டியிருந்தது. 

எந்தையும் தாயும்



        ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வருகிறது. நாம் பிற தினங்களைக் கொண்டாடுகிற அளவிற்கு நமக்கான தினத்தைப் பிறர் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு நாம் இல்லையா அல்லது சமூகம் நம்மைக் கொண்டாட மறந்துகொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கட்டும். வாருங்கள் நம்மை நாமே கொண்டாடிக்கொள்வோம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 7

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 1-8-2001
   ...... வணக்கம். ஜூலையும் போய்விட்டது. காலம் அதன் இயல்புப்படி செல்கிறது. நான் நலம். நீங்கள் நலம் தானே?

ஆய்தம் : அலகு பெறும் அழகு


     எனது முனைவர் பட்டத்திற்கான நேமிநாத ஆய்வு குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் கேட்டவர்கள் கொஞ்சம் வியப்புடனும் மனசுக்குள் கேள்வியுடனும் என்னைப் பார்ப்பது உண்டு. ‘நேமிநாதமா? அப்படியொரு இலக்கண நூலா? நான் கேள்விப்பட்டதில்லையே…’ என்றவர்களும் ‘இலக்கிய வரலாறுகளில் சின்னூல் எனச் சொல்வார்களே அதுவா?’ என்று ஒரு நூற்பெயராக மட்டுமே தாம் கேள்விப்பட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 6

வல்லிக்கண்ணன்                                 சென்னை 22-7-2001(ஞாயிறு)
.....
  வணக்கம். 
    நீங்கள் அனுப்பிய புத்தகங்களும் கடிதமும் கிடைத்து பல நாட்கள் ஆகின்றன. நான் கடிதம் எழுதுவதில் தான் தாமதம்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்