உயிர் குணம் நிறம்
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியில் கூறப்படும் சமயதத்துவ நெறிகளுள் வைதிகம், ஆசீவகம், சமணம் ஆகியனவும் அடங்கும். உயிர், குணம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று சமயதத்துவ நெறிகளும் ஒன்றோடொன்று ஒப்புநோக்குதற்கு உரியனவாக உள்ளன. அவ்வகையில் இவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரை. இதற்கென வைதிகத்தின் முக்குணக் கோட்பாடு, ஆசீவகத்தின் அபிசாதிக் கோட்பாடு, சமணத்தின் லேசியைக் கோட்பாடு ஆகியன இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
திருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்
![]() |
| Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan 'THAAI VAZI SAMUTHAAYAM' |
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத
பாறை ஓவியங்கள் திருமயத்தில் காணப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா. அருள்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள ஆய்வு திரு
இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துவரும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டக்
கண்காட்சியில் இடம்பெற்றது. திருமயம் பாறை ஓவியங்கள் கண்காட்சியைப் புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் திரு. செ. மனோகரன் திறந்து வைத்தார். முதன்மைக்கல்வி அலுவலர் நா.அருள்முருகன்
திருமயம் பாறை ஓவியங்கள் குறித்துத் தெரிவித்திருப்பதாவது.
| Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan |
நீலகேசி உரைநூல்
நீலகேசி
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும்
பௌத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு
மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப்போகின்றன. நீலகேசி
நூலின் சிறப்பு, அதன் பதிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்தான செய்திகள் மிகக் குறைவாகவே
உள்ளன. கிடைத்திருக்கும் தருக்க நூல்களில் சிறந்த ஒன்றான நீலகேசி சமயதத்துவ ஆய்விலும்
சொற்போரிலும் இறங்கிக் களம் கண்டது பெரிதும் அறியப்படாமலேயே போயிருக்கிறது.
Subscribe to:
Comments (Atom)
சப்பாத்திக் கள்ளிகளின் முட்கள்
-
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan 'THAAI VAZI SAMUTHAAYAM' புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத பாறை ஓவிய...
-
இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...
-
மொழிபெயர்ப்பும் விடுபடல்களும் நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் கா...





