காற்றுக் குடித்த மூச்சு

a poem on dreams, Dr.N. Arulmurugan

நாள்தோறும்
நாலு பேர்
பார்க்க
பேச
சிரிக்க

பார்த்துப் பேச
பேசிப் பார்க்க

சிரித்துப் பேச
பேசிச் சிரிக்க

சிரித்துப் பார்க்க
பார்த்துச் சிரிக்க

எத்தனை பேர்
கனவில்
என் இருப்பு ?

எத்தனை பேர்
இருப்பில்
என் கனவு ?

10 comments:

 1. அய்யா, இப்போதெல்லாம் என் கனவில் நீங்கள் வருகிறீர்களோ இல்லையோ திருமயம் பாறையும், பிம்பேத்கா.. கிருஷ்ணகிரியும் அந்த நம் மூதாதையர் கூட்டமும் வந்துகொண்டே இருக்கின்றன... வேட்டைக்காக காத்திருக்கிறோம்..திருமயம் மலை உச்சியில்...

  ReplyDelete
 2. அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. Nerukkadikkalukkum mathi il ithanai arumaiyana kavithai.nantri.

  ReplyDelete
 4. நேசிப்பவர்களை நேசிக்கும் உள்ளங்களில் பசுமரத்தாணியாய்...

  ReplyDelete
 5. ஐயா அவர்களுக்கு வணக்கம்
  நேசிக்கும் குணத்திற்கு சொந்தக்காரரிடமிருந்து வந்துள்ள கவிதை அருமையாக உள்ளது கண்டு மகிழ்ச்சி. கவிஞர் திரு. முத்துநிலவன் அய்யா அவர்களின் கருத்துரையைப் பார்க்கும் போது தங்களது ஆய்விற்கு நானும் ஏதோ ஒரு விதத்தில் இணைந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் மிகுந்துள்ளது. தங்களோடு இணைந்து ஆய்வு பணியிடங்களுக்கு நானும் வர ஆர்வமாக உள்ளேன். நீங்கள் இசைவு தந்தால் கவிஞர் முத்துநிலவன் ஐயா என்னையும் அழைத்துக் கொள்வார் என்று நம்புகிறேன். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 6. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

  நன்றி ஐயா...

  இந்த புத்தாண்டு சிறப்பாக அமையவும் நல்வாழ்த்துக்கள் பல...

  அன்புடன் DD

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா
  தங்கள் தளம் (எனது தளமும் ) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை கண்டு மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. எனக்கு முன்பாக தகவலை சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தெரிவித்து விட்டார். அவர் அளித்துள்ள சுட்டியில் சென்று பார்க்கவும் ஐயா. மிக்க நன்றி..

  ReplyDelete
 8. சிறப்பான வரிகளுக்கும் வலைச்சர அறிமுகத்திற்கும் என் இனிய
  வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்