Posts

Showing posts from 2013

காற்றுக் குடித்த மூச்சு

Image
நாள்தோறும்
நாலு பேர்
பார்க்க
பேச
சிரிக்க

பார்த்துப் பேச
பேசிப் பார்க்க

சிரித்துப் பேச
பேசிச் சிரிக்க

சிரித்துப் பார்க்க
பார்த்துச் சிரிக்க

எத்தனை பேர்
கனவில்
என் இருப்பு ?

எத்தனை பேர்
இருப்பில்
என் கனவு ?

வேலைவாய்ய்ப்பூ

Image
பிடித்திருக்கிறதாவேலை
பிடித்திருக்கின்றன
நெருக்கடிகள்

உயிர் குணம் நிறம்

Image
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியில் கூறப்படும் சமயதத்துவ நெறிகளுள் வைதிகம், ஆசீவகம், சமணம் ஆகியனவும் அடங்கும். உயிர், குணம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று சமயதத்துவ நெறிகளும்  ஒன்றோடொன்று ஒப்புநோக்குதற்கு உரியனவாக உள்ளன. அவ்வகையில் இவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரை. இதற்கென வைதிகத்தின் முக்குணக் கோட்பாடு, ஆசீவகத்தின் அபிசாதிக் கோட்பாடு, சமணத்தின் லேசியைக் கோட்பாடு ஆகியன இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

திருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்

Image
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத பாறை ஓவியங்கள் திருமயத்தில் காணப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள ஆய்வு திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துவரும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டக் கண்காட்சியில் இடம்பெற்றது. திருமயம் பாறை ஓவியங்கள் கண்காட்சியைப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு. செ. மனோகரன் திறந்து வைத்தார். முதன்மைக்கல்வி அலுவலர் நா.அருள்முருகன் திருமயம் பாறை ஓவியங்கள் குறித்துத் தெரிவித்திருப்பதாவது. திருமயத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையைக் காட்ட உதவும் முதன்மையான ஆதாரமாகும். இந்தப் பாறை ஓவியங்கள் இப்போதுதான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. சித்தன்ன வாசல்  ஓவியம் கி.பி. 7 – 9 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலப் பகுதியைச் சார்ந்தது. திருமயத்தில் தற்போது தெரியவந்திருக்கும் பாறை ஓவியங்கள் கி.மு. 5000க்கும் முற்பட்டவையாகும். இவை புதுக்கோட்டை மாவட்டத்து ஓவியங்களிலேயே மிகவும் பழமையானவை ஆகும்.

நீலகேசி உரைநூல்

Image
மொழிபெயர்ப்பும் விடுபடல்களும் நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப்போகின்றன. நீலகேசி நூலின் சிறப்பு, அதன் பதிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்தான செய்திகள் மிகக் குறைவாகவே உள்ளன. கிடைத்திருக்கும் தருக்க நூல்களில் சிறந்த ஒன்றான நீலகேசி சமயதத்துவ ஆய்விலும் சொற்போரிலும் இறங்கிக் களம் கண்டது பெரிதும் அறியப்படாமலேயே போயிருக்கிறது.

மரமண்டை

Image
இந்தவழியாப்போம்போதெல்லாம் எதையோபறிகுடுத்தாப்லஇருக்கு.
ஆயிரரூவாபிச்சக்காசுக்கு இங்கிருந்தரெண்டுபுளியமரத்தையும் வெட்டிட்டானுங்கபோனவருசம்.

கடவுள் வணக்கம்

Image
பாட்டனின்முதுகில்உப்புமூட்டைஏறி காதுகடித்துக்கிச்சுக் கிச்சுமூட்டி கண்ணைப்பொத்திவிளையாடியதில்லை.
பாட்டியின்மடியில்பழங்காலத்து ராஜாக்கதைகளைரசித்தபடியே தூங்கிப்போனஅனுபவமில்லை.

தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள்

Image
முழக்கமும் உழைப்பும்

இலக்கணம் என்றாலே சிலருக்குக் 'கருக்' என்கிறது. இலக்கணம் படிப்பவர்களைப் பார்த்து மிரள்கிறவர்களும் பரிதாபப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். கல்வித்தகுதிக்காக இலக்கணம் படிக்க நேர்கிறவர்கள் தடுமாறி நிற்பதும் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என முயல்வதும் நடக்கிறது. ஒருமுறை பார்த்தால் போதும்; விடைகள் வந்து குவிய வேண்டும். அப்படியொரு அற்புதம் நிகழ்த்துகிற 'எளிய உரை', நோட்ஸ் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் எனக் கூசாமல் கேட்கிற அப்பிராணிகளும் உண்டு. இலக்கணக் கல்வியின் நிலை இப்படி ஆனதற்குப் படிப்போர் மட்டும் காரணமல்ல. இலக்கணத்தைக் கற்பிப்போரும் ஒருவகையில் காரணம்.

இலக்கணப் பயிற்சி இப்படி இருக்கும் சூழலில் இலக்கணப் பதிப்பு பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஏற்கனவே அச்சிடப்பட்ட நூலின் ஆசிரியருக்கு 'ஓய்வு' கொடுத்துவிட்டுத் தம் பெயரை மட்டும் சேர்த்து வெளியிடுவது; போனால் போகிறதென்று தம் பெயருடன் ஆசிரியர் பெயரையும் சேர்த்துக்கொள்வது; பதிப்புணர்வே இல்லாமல் மூலப் பதிப்பாசிரியன் பல நாள் உழைத்துத் தொகுத்த முற்சேர்க்கை, பிற்சேர்க்கைகளைத் திருகி எறிந்துவிட்டு நூலை ம…

’தேவன்’ யார்?

Image
தேவன் உரைப்பத் தெளிந்தேன்


நீலகேசி அவையடக்கம்  ஐந்தாம் செய்யுளில் தேவன் என்னும் சொல் பயின்று வருகிறது. இது திருவள்ளுவரைக் குறிப்பதாகுமா? இதுபற்றிய பெருமழைப் புலவரின் ஆராய்ச்சி நுணுக்கம் எந்த அளவில் உள்ளது? என்பன பற்றி இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகிறது.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் நீலகேசி  சக்கர்வர்த்தி நயினார் பதிப்பாக1936இல் வெளிவந்தது. சமய திவாகர வாமன முனிவர் இதன் உரையாசிரியர் ஆவார். இதன் நூலாசிரியர் யார் எனத் தெரியவில்லை. இதை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரை உரையாசிரியராகக் கொண்டு நீலகேசி விளக்கவுரை என்னும் பெயரில் 1964இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
‘பழைய உரையாசிரியரால் உரையெழுதாமல் விடப்பட்ட செய்யுள் உட்பட எல்லாச் செய்யுட்களுக்குமே சொற்பொருள் உரை வகுத்தும் பழைய உரையாசிரியர் உரையிற்கண்ட நுணுக்கங்களைச் சிறிதும் எஞ்சாது தழுவிய விளக்கவுரை வகுத்தும்’ கழகம் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு கவிதை

Image
நூலுக்குச் சாயமேற்றத் தொடங்கி

நதிக்குச் சாயமேற்றி

முடித்தார்கள்