சப்பாத்திக் கள்ளிகளின் 
முட்கள்
உறவுகளுக்கும்
ஊர் நண்பர்களுக்கும்

 உறக்கம் கலைத்த

முன்பனிக்கால நள்ளிரவு

வீதியில் கண்டெடுத்த வைரங்கள்


         இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா கிடக்கும் டயரை எடுத்து ஓட்டிப்பார்த்து ஆகா நாம் கூட சைக்கிள் விடுகிறோமே என்று மகிழ்ந்து போகிற பிஞ்சுப் படைப்பாளர்கள்தாம் அதிகம். நிஜக் காரைப் பார்த்து பொம்மைக் காரில் வலம்வரத் துறுதுறுக்கும் ஆர்வலர்களே மிகுதி.  இங்கு படைப்புக்கான உங்கள் விதிகள் செல்லாது. புதுமைப்பித்தன் சொன்னதுபோல உங்கள் அளவுகோல்களை இங்கு வைத்து அளக்க முடியாது.  எங்கள் படைப்புகளில் இருந்து நீங்களே விதிகளைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

30 / 11 / 2017


நெடுஞ்சாலைகள் நீள்கின்றன
நிரந்தரமாய்ப் போவதற்கான
ஏற்பாடுகளுடன்

இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே...

   நிகழ்கால இடைநிலைகளில் ஆநின்று என்பது எப்போதோ மறைந்துவிட்டது. கின்று என்பதும் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. நிகழ்காலத்தைக் குறிக்க கிறு ஒன்று மட்டும் போதாதா? கின்றையும் சொல்லிக்கொடுத்துத்தான் தீரவேண்டுமா? என ஏக்கமாகக் கேட்டார் நண்பர். என்ன..., மக்கள் கின்றையும் கைவிடத் தயாராகிவிட்டார்களோ என்று அதிர்ச்சியாக இருக்கின்றதா? மொழியில் இதெல்லாம் நடப்பதுதான். ஆனாலும் கின்று அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.

உலகக் கவிதைகள் தினம்

குறுகுறுக்கும் கருவிழி நிறையும்
தன்னிழல் தின்ன முயன்று
அலகு வலி தாளாமல் மருண்டு
கலங்கி நிற்கிறது குருவி
நினைவோடை நெடுவழியே
உலக ஆடியில் தெறிக்கும்
தன் மாயபிம்பம் வெல்ல
திக்கற்று
இடருறும் மானிடப் பறவை

குருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்