வல்லிக்கண்ணன் கடிதங்கள் 1

வல்லிக்கண்ணன்                                                                                சென்னை 26-5-2001

 .... வணக்கம். நீங்கள் சென்னையிலேயே இருக்கிறீர்களோ. அல்லது ஊர் திரும்பி விட்டீர்களோ – தெரியவில்லை. இருப்பினும் ஊர் முகவரிக்கே இக்கடிதம் எழுதுகிறேன்.




கவிதைகளை அச்சுக்குக் கொடுத்திருப்பீர்கள். வசதிகள் இருப்பின், ஒரு வாரத்திலேயே கூட புத்தகத்தை அழகாக உருவாக்கிவிட முடியும் என்று பல வெளியீட்டாளர்கள் செயல் மூலம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் கவிதைத் தொகுப்பும் விரைவில் வந்து விடும் என்று எண்ணுகிறேன். கவிதைகள் வித்தியாசமான பார்வையுடன் நன்கு எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்த்துகள். நான் நலமாக இருக்கிறேன். அக்னி நட்சத்திர வெயில் கடுமையாகக் காய்கிறது.
       
                                                                            நலம் தானே?
   அன்பு
வ.க./.. 

5 comments:

  1. வெறும் தகவல்களாக இல்லாது சூழலை பதிவு செய்வதும் ஒரு நல்ல கடிதத்தின் பண்புகளில் ஒன்று ..
    த ஆர்ட் ஆப் லெட்டர் ரைட்டிங் என்கிற ஒரு அற்புதமான பாடத்தில் கடிதம் எழுதும் ஒருவர் ஒரு இரவு நடைப் பயிற்சியில் சாலையில் விழும் நீண்ட வேலிக்கம்பியின் நிழல்களைக் கூட கடிதத்தில் குறிப்பிடலாம் என இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் படித்தது..

    மிகச் சரியாக எழுத்தாளர் அவரது சூழலை இந்தக் கார்டில் பதிந்திருப்பது அருமை
    //அக்னி நட்சத்திர வெயில் கடுமையாகக் காய்கிறது.//

    இன்று எஸ்.எம்.எஸ், ஈமெயில் என்று வந்தாலும் இப்படி பொக்கிஷமாக பகிர பாதுகாக்க முடியாது அவற்றை...
    நல்லதோர் வாசிப்பனுபவம்... நன்றி அய்யா..

    ReplyDelete
  2. எழுத்துக்களில் எல்லாம் உள்ளது அய்யா.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    தங்களின் எழுத்து வல்லிக்கண்ணன் ஐயா போன்ற தமிழறிஞர்களின் நட்பை பெற்றுத் தந்திருக்கிறது என்பதையும், கவிதைகள் வித்தியாசமான பார்வை என்று பாராட்டியதையும் படிக்கும் போது ரொம்பவே மகிழ்வாக இருக்கிறது. புகைப்படங்களை விட கடிதங்கள் கடந்த கால நிகழ்வுகளுக்கு வெகுவாக இழுத்துச் செல்லும் என்பதை உணர்ந்தேன் ஐயா. நேரில் பார்க்கும் போதே பார்த்தும் பார்க்கததும் போல நகர்ந்து செல்லும் பெரிய மனிதர்களுக்கிடையில் கடிதங்கள் மூலம் மறவாது நட்பு பாராட்டிய வல்லிக்கண்ணன் ஐயா அவர்கள் மனிதருள் மாணிக்கம்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா.
    பயணக் கட்டுரை, இலக்கிய இலக்கண ஆய்வுகள், வரலாற்றியல் ஆய்வு, மொழி ஆய்வு வரிசையில் கடித இலக்கியம். அருமை ஐயா. தங்களின் பன்முகப் பரிமாணம் கண்டு வியக்கின்றேன். எங்களின் இளைய மு.வ. நீங்கள் தான். நன்றி ஐயா

    ReplyDelete
  5. ஐயா ,நேரில் பேச முடியாததை கடிதம் பேசும். ஆனால்,இயல்பாக,எளிமையாக,வெற்று வார்த்தைகளைத் தொடுக்காமல் யதார்த்தமாகப் பேசுகிறது வல்லிக்கண்ணன் ஐயாவின் கடிதம்.தொடர்ந்து வெளியிடுங்கள் ஐயா.!

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்