விளையாடிய காலம்


அவர்களெல்லாம்
இங்கிலீசில் எகிறி
வாத்தியார் விளையாட்டு விளையாட


நானும் என் சேக்காளியும்
இங்கிலீசுக்குப்  பயந்து
மாடு மேய்த்து
மரமேறி வெளையாண்டோம்
கொரங்கு வெளையாட்டு

இன்று
நாங்கள் வாத்தியாராகி
இங்கிலீசில் விளாச

அவர்களோ
ஹை.. ஹை ...
ப்பா.. ப்பா...

கூர்நகங்கள் குத்திக் கிழிக்க
காலக் கனவுகள்
இடம் மாறின

இனியொருமுறை
வருமா அந்தக் காலம்
பழையபடி இடம் மாறி ?

11 comments:

 1. வணக்கம் ஐயா
  வாழ்வின் வசந்த காலமான மாணவப் பருவம் மீண்டும் அமைந்து விட்டால் அதை விட பேறு ஏது ஐயா. வாத்தியார் வேலைக்கு மட்டும் போகக் கூடாது என்று இளமைப் பருவத்தில் நீங்கள் எண்ணியதாக கூறிய பேச்சு நினைவுக்கு வருகிறது ஐயா. வாழ்க்கை எனும் படகினை காற்று எப்போது திசை திருப்பும் என்பது யாரு அறிந்துள்ளார்கள். எதார்த்தமான, கிராமத்து மண் கமழும் அழகிய கவிக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 2. வாய்ப்பே இல்லை அய்யா,கூடிக்களித்த நாட்கள் நினைவுகளில் மட்டுமே.

  ReplyDelete
 3. இனிய நினைவுகள் ஐயா...

  ஆனால் மறுபடியும் - சிரமம் தான்...

  ReplyDelete
 4. மூணாம்ப்பு படிக்கிறப்ப வந்துசேந்த பர்மாக்காரப் பயல் ஒருத்தன், இங்கிலீசு பொளந்து கட்ட, அப்பத்தான் என் தமிழ்க்காதல் வளர்ந்தது. அப்பறம் நான் அவனுக்குத் தமிழ் டீச்சராவும், அவன் எனக்கு இங்கிலீசு வாத்தியாராவும் மாறினாலும்.. அந்த நெகிழ்ச்சி இனி எங்கே? நல்ல நினைவுகளைக் கிளறி விட்டது கவிதை நன்றி.

  ReplyDelete
 5. ஐயா வணக்கம். காலம் பொன் போன்றது. இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடலாம். ஆனால் மீண்டு திரும்ப ஆசைப் பட்டாலும் காலம் திரும்பிட அசையாது. அருமையான வரிகள்... அசை போடுகிறேன் நானும்... நன்றி.

  ReplyDelete
 6. ஐயா வணக்கம். காலம் பொன் போன்றது. இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடலாம். ஆனால் மீண்டு திரும்ப ஆசைப் பட்டாலும் காலம் திரும்பிட அசையாது. அருமையான வரிகள்... அசை போடுகிறேன் நானும்... நன்றி.

  ReplyDelete
 7. இளமைக் கால நினைவுகளை கிளர்ந்தௌ வைத்துவிட்டீர்கள் ஐயா
  நன்றி

  ReplyDelete
 8. ஐயா,'"சோக்காளி" ,"கொரங்கு விளையாட்டு " போன்ற மண் மனம் மாறாத வார்த்தைகள் அருமை....!நன்றி அய்யா .

  ReplyDelete
 9. காலம் ஒரு புதிர்...
  நேரிடையாக அவர்கள் மாடு மேய்க்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருப்பது என்னைக் கவர்ந்தது...
  நன்றி..

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....அதெல்லாம் ஒரு கனாக் காலம்

  ReplyDelete

30 / 11 / 2017

நெடுஞ்சாலைகள் நீள்கின்றன நிரந்தரமாய்ப் போவதற்கான ஏற்பாடுகளுடன்