வல்லிக்கண்ணன் கடிதங்கள் 12

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 19-11-2001

         அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம். நான் உங்களுக்குக் கடிதம் எழுதி அநேக வாரங்கள் ஆகிவிட்டன. அக்டோபர் முதல், எனது இயல்புகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்ட செயல்முறைகளில் உழல வேண்டிய ஒரு கட்டாயம்.
படிக்கவும் எழுதவும் இயலாது. அக்டோபர் முதல் எந்தப் பத்திரிகையையும் புத்தகமும் படிக்கவில்லை. கடிதங்கள் எழுதும் எண்ணத்துக்கே இடமில்லை. கண்களில் புரைநோய் (கேட்ராக்ட்) என்று அறுவை செய்ய நேரிட்டது. அக்.10ல் இடது கண்ணிலும், 22ல் வலது கண்ணிலும். தொடர்ந்து அதற்கான சிகிச்சைகள். நலமாக இருக்கிறேன். படிக்கவும் எழுதவும் தனியாக டெஸ்ட் பண்ணி, கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டும். வசதிப்படும்போது விரிவான கடிதம் எழுதுவேன்…

     இக் கடிதம் எழுதும்போது, தபாலில் உங்கள் கடிதம் வந்தது. மகிழ்ச்சி.  வாழ்த்துகளுக்கு நன்றி. 

      சென்னையில் மழை பெய்தது என்றாலும் போதுமான அளவு இல்லை. குடிதண்ணீர் ஏரிகள் நான்கிலும் ஏழு மாதங்களுக்கு வரக்கூடிய அளவு தண்ணீர் தான் பெருகியுள்ளது. - வ.க./.. 

Comments

 1. ஐயா வணக்கம்.

  தொடரட்டும் தங்களின் இலக்கியப் பணி.

  நன்றி

  ReplyDelete
 2. தங்களின் எழுத்துப் பணி இலக்கியப் பணி
  இனிதே தொடரட்டும் ஐயா
  வாசிக்கக் காத்திருக்கிறோம்
  நன்றி

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா
  தங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. மகிழ்வு ...
  ஒரு இலக்கிய ஆளுமை நகரின் குடிநீர் குளங்களின் நிலை குறித்து சக இலக்கிய ஆளுமைக்கு எழுதிருப்பது என்னை வியக்க வைக்கிறது அய்யா.
  பகிர்வுக்கு நன்றிகள்
  தம +

  ReplyDelete
 5. வணக்கம் அய்யா
  மிகப்பெரிய ஆளுமை மிக்க ஒரு நபர் கடிதம் எழுதாதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லாத போதும் அதற்கான காரணத்தை நட்புள்ளத்தோடு பகிர்ந்து கொண்டது வியப்பளிக்கிறது. கடிதம் கிடைக்காத காலத்திலும் தாங்கள் அவருக்கு கடிதம் எழுதியிருப்பது மூலம் இருவருக்குமான நட்பின் ஆழத்தை விவரிக்கிறது அய்யா. தொடரட்டும் தங்கள் பணி...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்

நீலகேசி உரைநூல்

நட்ட கல்லும் பேசுமே…