வல்லிக்கண்ணன் கடிதங்கள் 5

வல்லிக்கண்ணன்                                                                             சென்னை 17-7-2001

......., வணக்கம்.
        பயணம் புதிது கலை இலக்கிய விழா அழைப்பு – ‘பயணம் புதிது’ இதழுடன் – நேற்று (16 திங்கள்) வந்தது. விழா 15 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றிருக்கும்.


‘நதிக்கரையில் தொலைந்த மணல்’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பெற்று, இலக்கிய அன்பர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்கும். வாழ்த்துகள். நேற்று புக் போஸ்டில் கலை, நந்தவனம், தூரிகை, எனும் மூன்று சிற்றிதழ்கள் அனுப்பினேன். நான் படித்தவற்றை இப்படி நண்பர்களுக்கு அனுப்பி விடுவது வழக்கம். சேர்த்துவைத்துப் பாதுகாக்க வசதிகள் இல்லை என்பதால். நலமாக இருக்கிறேன். நீங்களும் நண்பர்களும் நலம் தானே?              
                                                                                                                                          அன்பு 
                                                                                                                                            வ.க./.. 

2 comments:

  1. சேர்த்து வைத்து பாதுகாக்க வசதி இல்லை எனவே அவற்றை மேலும் கொஞ்சம் செலவு செய்து அனுப்பும் பெரிய மனது யாருக்கும் வராது.

    பெரியவர் பெரியவர்தான் ...
    வியத்தல் எப்போதும் இலமன்று ..

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா. நீண்ட நாள்கள் கழித்துத் தங்களின் பதிவு கண்டேன். நதிக் கரையில் தொலைந்த மணல் எனும் தங்களின் கவிதைத் தொகுப்புப் பற்றிய குறிப்பு அறிந்து மகிழ்கின்றேன்.மேலும் அந்தக் கவிதைகளை இந்த வலைப்பூ மூலமாக நுகரச் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி ஐயா.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்